குவைட்டில் நிர்கதியாகியுள்ள இலங்கையர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை...!
தங்களை விரைவில் நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு குவைட் நாட்டில் அரச பாதுகாப்பு வளாகம் ஒன்றில் நிர்கதியாகியுள்ள இலங்கை பணி பெண்கள் கோரியுள்ளனர்.
இது தொடர்பிலான கோரிக்கைகள் அடங்கிய காணொளி பதிவொன்றை அவர்கள் நேற்று வெளியிட்டுள்ளனர்.
தங்களது பணிக்காலம் நிறைவடைந்துள்ள போதிலும் சுமார் 70 பணியாளர்கள் கடந்த 7 மாதங்களாக நிர்கதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எந்தவொரு அடிப்படை வசதிகளும் தங்களுக்கு ஏற்படுத்தி கொடுக்காத நிலையில் பல சிரமங்களை எதிர் கொண்டுள்ளதாகவும் பணியாளர்கள் அந்த காணொளியில் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே தங்களை துரிதமாக நாட்டுக்கு அழைத்துவருதவற்கான நடவடிக்கையினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என குவைட்டில் சிக்கியுள்ள இலங்கை பணியாளர்கள் கோரியுள்ளனர்.