
வேறஹெர மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது...!
பிலியந்தலை - வேறஹெர மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுபடுத்தப்பட்ட சேவையாளர்களுடன் குறித்த திணைக்களம் நாளைய தினம் திற்ககப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் நாராஹேன்பிட்டியில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தொடர்ந்தும் மீள் அறிவிப்பு வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த திணைக்களத்தில் அளிக்கப்படும் சேவைகளை யாழ்ப்பாணம், குருநாகல், கம்பஹா, மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்ட அலுவலகங்களின் வாயிலாக பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த மாவட்ட காரியாலங்களை தொடர்பு கொள்ள கீழுள்ள இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
.