இயன்றளவு தவிருங்கள் - இராணுவத் தளபதியின் விசேட அறிவிப்பு

இயன்றளவு தவிருங்கள் - இராணுவத் தளபதியின் விசேட அறிவிப்பு

கொழும்பு நகரத்திற்கு வருவதை இயன்றளவு தவிர்க்குமாறு இராணுவத் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று தளர்த்தப்பட்டுள்ள போதிலும் மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களை தவிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் நிலவும் கொரோனா அச்ச நிலமை தொடர்பில் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

அத்தியாவசிய தேவைகளைத் தவிர ஏனைய விடயங்களுக்காக கொழும்பு நகரத்திற்கு வருகை தருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை மீறி நடந்தால் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பதை எவராலும் தவிர்க்க முடியாது.

மிகவும் ஆபத்தான பகுதிகளே தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் இல்லை என்பது அதன் அர்த்தம் அல்ல.

நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைக் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும்.

நாட்டை மூடிவிட்டால் மக்களின் அன்றாட நடவடிக்கை யில் பாதிப்பு ஏற்படும். ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றினை தடுப்பது கடினம்.

இதனைக் கருத்திற்கொண்டு பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட்டு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றார்.