
நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையிடமிருந்து பொது மக்களுக்கான விசேட அறிவித்தல்...!
தற்போதைய கொவிட் 19 பரவலுக்கு மத்தியிலும் சுத்தமான குடிநீர் தொடர்ந்தும் விநியோகிக்கப்படுவதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதேநேரம் நீர் கட்டணத்தை விநியோகிக்கவரும் அதிகாரிகளுக்கு சுகாதார வழிமுறைகளுக்கு அமைய கடமையினை நிறைவேற்ற இடமளிக்குமாறு அந்த சபை பொது மக்களிடம் கோரியுள்ளது.
நீர் கட்டணத்தை வழங்க வருபரை சந்திப்பது அல்லது உரையாடுவதை குறைத்துக்கொள்ளுமாறும், நீர் கட்டணம் தொடர்பில் பிரச்சினைகள் காணப்பட்டால் நீர் கட்டணத்தில் உள்ள தொலை பேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அந்த சபை தெரிவித்துள்ளது.
அத்துடன்' www.waterboard.lk என்ற இணையத்தளம் ஊடாக நீர் கட்டணத்தை செலுத்த முடியும் என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.