எதிர்வரும் 24 மணி நேரத்தில் நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் ...!

எதிர்வரும் 24 மணி நேரத்தில் நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் ...!

எதிர்வரும் 24 மணி நேரத்தில் நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் மழைபெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம், கொழும்பு முதல் புத்தளம், மன்னார் மற்றும் காங்கேஸன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.