இந்திய மீன்பிடி படகுகள் தொடர்பாக மீன்பிடி அமைச்சுக்குக் கடற்படை விடுத்த கோரிக்கை..!!
இலங்கை கடற்பரப்பிற்குள் வைத்து இந்திய மீனவர்களுடன் கையகப்படுத்தப்பட்ட மீன் பிடி படகுகளை ஏலத்தில் விடுவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கடற்படை மீன்பிடி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய சட்டரீதியான நடவடிக்கைகளை நிறைவு செய்த 140 படகுகளை குறித்த நடவடிக்கைக்கு உட்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மீனவ படகுகளானது கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கடந்த 2018 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மேலும் 62 மீனவ படகுகள் கடற்படையினர் வசம் காணப்படுவதாகவும் அதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.