சஜித் அணியில் ஐவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றின் வாயிலாக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம்...!
ஐக்கிய மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவ படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ, நலின் பண்டார, ஜே சீ . அலவத்துவல , மயந்த திசாநாயக்க மற்றும் சுஜித் சஞ்சய ஆகியோருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றின் வாயிலாக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசியல் பழிவாங்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
குறித்த ஐவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றைய தினம் முன்னிலையான போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசியல் பழிவாங்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமைக்காக அவர்களை இன்றைய தினம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.