கொரோனா கால நிவாரணம் பெறச்சென்றவர் திடீரென மரணம்

கொரோனா கால நிவாரணம் பெறச்சென்றவர் திடீரென மரணம்

கந்தானையில் கொரோனா கால நிவாரணமாக அரசாங்கம் வழங்கும் ரூ .5000 கொடுப்பனவைப் பெற வரிசையில் காத்திருந்த ஒரு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்பரிதாபச் சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

கொரோனா காரணமாக வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் உதவித் தொகையைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்தபோது - திடீரென மயக்கமடைந்து விழுந்து அவர் இறந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

காதிரானாவில் வசிக்கும் 62 வயதான நபரே கிராம சேவகர் அலுவலக வளாகத்தில் விழுந்து இறந்துள்ளார்.

குறித்த நபரிடம் பி.சி.ஆர் பரிசோதனையினை நடத்துமாறு நீர்கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.