கொரோனா மரணங்களுக்கு சுகாதார அமைச்சே பொறுப்பு : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!
நாட்டில் பதிவாகும் கொரோனா மரணங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு பொறுப்புக்கூற வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று ஊடகங்ளுக்கு கருத்துரைத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“கொரோனா மரணங்களை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக தற்போது பதிவாகும் மரணங்கள் பேலியகொடை மற்றும் மினுவாங்கொடை கொரோனா கொத்தனியுடன் தொடர்புடையனவா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
மரணங்கள் ஏற்படும் போது சுகாதார அமைச்சு அதிலிருந்து விலகி செயற்பட முடியாது.
ஏனென்றால் இதற்கு பொறுப்புக் கூற வேண்டிய கடமை சுகாதார அமைச்சுக்கு காணப்படுகின்றது என்பதை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் என்ற வகையில் நாம் அதனை வலியுறுத்துகின்றோம்” என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.