முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்..!

முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்..!

கொவிட் 19 தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பாக நேற்று முன்தினம் கலந்துரையாடப்பட்டதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கொள்ளுபிட்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் 19 காரணமாக மரணிப்பவர்களின் சடலங்கள் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய தகனம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் முஸ்லிம்களின் சடலங்கள் தகனம் செய்யப்படுவதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையில் அது தொடர்பில் ஆராய அமைச்சரவையினால் 18 பேர் கொண்ட தொழில்நுட்ப குழு நியமிக்கப்பட்டது.

குறித்த குழுவுடன் நேற்று முன்தினம் கலந்துரையாடல் நடத்தியதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் அந்த குழுவில் அங்கம் வகிக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர்கள், ஏதோ ஒரு அச்சம் காரணமாக இதற்கு தடையாக இருப்பதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார்.