பயணக்கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வேண்டும் : சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்து!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டாலும் பயணக்கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக மேலும் குறிப்பிடுகையில்,
“பாடசாலைகள் மற்றும் கல்விசார் நிறுவனங்களை மீண்டும் திறப்பதற்கான சூழல் ஏற்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் திறக்கப்படவுள்ளன.
எனினும் நாட்டில் தற்போது அமுலில் கொரோனா தடுப்பு சுகாதார விதிமுறைகள் தொடர்ந்தும் பின்பற்றப்பட வேண்டும்.
மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முன்னெடுக்கப்படாத வகையில் ஊரடங்கு சட்டத்தினை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை நாம் இங்கு தெரிவித்துக்கொள்கின்றோம்”என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன மேலும் குறிப்பிட்டுள்ளார்.