விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களை மெனிங் சந்தைக்குள் பிரவேசிக்க மறுப்பு தெரிவித்த காவல் துறையினர்...!

விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களை மெனிங் சந்தைக்குள் பிரவேசிக்க மறுப்பு தெரிவித்த காவல் துறையினர்...!

புறக்கோட்டையில் அமைந்துள்ள மெனிங் பொது சந்தை மூடப்பட்டிருந்தமையினால் இன்றைய தினம் அங்கு வருகை தந்த வர்த்தகர்கள் பதற்றமான நிலைமை ஒன்றினை எதிர்நோக்கியுள்ளனர்.

இன்று அதிகலை 05 மணியுடன் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டமையினால், புறக்கோட்டையில் அமைந்துள்ள மெனிங் சந்தையானது மீண்டும் திறக்கப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே வர்த்தகர்கள் இன்றைய தினம் கொழும்பு மெனிங் சந்தைக்கு வருகை தந்திருந்தனர்.

எனினும் மெனிங் மரக்கறி சந்தைக்கு வருகை தந்திருந்த வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகளை சந்தைக்குள் பிரவேசிக்க காவல் துறையினர் மறுப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்தே அங்கு பதற்றமான நிலை உருவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.