ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளனர்..!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளனர்..!

அரசியல் பழி வாங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு களங்கம் விளைவித்ததாக தெரிவிக்கப்படும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் இன்றைய தினம் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளனர்

குறித்த ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன நேற்றைய தினம் வெளியிட்ட அறிவித்தலுக்கு (நோட்டீஸ்) அமைய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் இன்றைய தினம் முன்னிலையாகவுள்ளனர்.

ஹரின் பெர்னாண்டோ, நளின் பண்டார, ஜே . சீ அலவத்துவல, மயந்த திசாநாயக்க, மற்றும் சுஜித் சஞ்ஜய ஆகியோருக்கே இவ்வாறு அறிவித்தல் (நோட்டீஸ்) விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசியல் பழி வாங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிபபு ஆணைக்குழுவில் கடந்த 06 ஆம் திகதி முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ததோடு குறித்த ஆணைக்குழு அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்துவதாகவும், சட்டத்தை கடுமையாக அத்துமீறுவதாகவும், தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.