புற்று நோயாளர்களுக்கான சுகாதார அமைச்சின் விசேட வேலைதிட்டம்..!
புற்று நோயாளர்களுக்கு சுகாதார அமைச்சு விசேட வேலைதிட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது.
இதற்கமைய புற்று நோயாளர்கள் மஹரகமவில் அமைந்துள்ள அபெக் ஷா வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக வருகை தர வேண்டாம் என சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன் ஔடதங்களை பெற்றுக்கொடுக்கவும் விசேட வேலைதிட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் நோயாளர்களுக்கு ஔடதங்களை தபால் திணைக்களத்தின் வாயிலாக வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வைத்தியர் பிரியந்த அத்தபத்து தெரிவித்துள்ளார்.