நிறுவனங்கள் கட்டுப்பாடுகளை பேணாவிடில் 7 வருட சிறை - பொலிஸ் ஊடகப்பிரிவு

நிறுவனங்கள் கட்டுப்பாடுகளை பேணாவிடில் 7 வருட சிறை - பொலிஸ் ஊடகப்பிரிவு

மேல்மாகாணத்திற்குள் திறக்கப்படும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் சுகாதார அமைச்சினால் வெளியிடுப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கமைய செயற்பட வேண்டியது கட்டாயமாகும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தகவல் திரட்டும் நடவடிக்கைகளின் போது எவரேனும் பொய்யான தகவல்களை வழங்கினால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதுடன், அத்தகைய நபர்களை 7 வருடங்கள் வரை சிறை வைக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.