மிஹிந்தலையில் தேசிய பொருளாதார மத்திய நிலையமொன்றை நிர்மாணிக்க நடவடிக்கை

மிஹிந்தலையில் தேசிய பொருளாதார மத்திய நிலையமொன்றை நிர்மாணிக்க நடவடிக்கை

புறக்கோட்டை மொத்த விற்பனைப் பரிமாற்றங்களுக்கு நிகரான வகையில், தேசிய பொருளாதார மத்திய நிலையமொன்றை அனுராதபுரம் மிஹிந்தலை பகுதியில் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம்-மிஹிந்தலைப் பகுதிக்கான கண்காணிப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருந்த வேளையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்பு மொத்த விற்பனை நிலையம் திடீரென மூடப்பட்டாலும், பொதுமக்களுக்கான பொருட்களை இங்கிருந்து விநியோகிப்பதில் சிக்கல் நிலை ஏற்படாது எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும், அனுராதபுரம், வவுனியா, மட்டக்களப்பு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கான பிரதான பொருளாதார மத்திய நிலையமாக இது அமையுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.