தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் நுழையவோ, அங்கிருந்து வெளியேறவோ முழுமையாகத் தடை

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் நுழையவோ, அங்கிருந்து வெளியேறவோ முழுமையாகத் தடை

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதன் பின்னர், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்குள் உள்நுழைவது மற்றும் அங்கிருந்து வெளியேறுவது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவற்துறைமா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

காவற்துறை களப்படை தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.