நாட்டில் நேற்றைய தினம் 449 பேருக்கு கொவிட்-19தொற்றுறுதி
நாட்டில் நேற்றைய தினம் 449 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளில் முன்னதாக அடையாளம் காணப்பட்ட நோயாளர்களுடன் தொடர்புடைய 445 பேரும், வெளிநாட்டில் இருந்து வந்த 3 கடலோடிகளுக்கும், ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 419 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த எண்ணிக்கையில், 9 ஆயிரத்து 937 பேர் பேலியகொடை மற்றும் மினுவாங்கொடை கொத்தணிகளை சேர்ந்தவர்களாவர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெறுபவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 662 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து நேற்று 537 பேர் குணமடைந்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்து 723 ஆக அதிகரித்துள்ளது.