கொரோனா மற்றும் டெங்கு நோயால் பீடிக்கப்பட்ட இளைஞர்: IDHகு மாற்றம்.
டெங்கு நோயும் கொரோனா நோயும் உறுதிசெய்யப்பட்ட நோயாளி ஒருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த 2 ம் திகதி சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு முதலில் டெங்கு நோய் பீடிக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது.
அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொவிட்19 தொற்றும் இருக்கின்றமை உறுதி செய்யப்பட்டது.
29 வயதான அவர் தற்போது ஐடிஎச்சுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவருடன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் தங்கி இருந்த ஏனைய நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனைகளில் யாருக்கும் கொவிட் தொற்று இருக்கவில்லை என தெரியவந்துள்ளது.