அரச நிறுவன ஊழியர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்..!
நாளை ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டாலும், அரச நிறுவனங்களில் அத்தியாவசியமானவர்கள் மாத்திரம் சேவைக்கு சமூகமளிக்க வேண்டுமென பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தலை நொக்காக கொண்டு, இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், நாளை ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டாலும், அரச நிறுவனங்களில் அத்தியாவசியமானவர்களை மாத்திரம் சேவைக்கு அழைக்குமாறு நிறுவன பிரதானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சேவைக்கு அழைக்கப்பட வேண்டிய அலுவலக ஊழியர்கள் தொடர்பில் நிறுவன பிரதானிகளினால் தீர்மானம் மேற்கொள்ள முடியுமென பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி கூறியுள்ளார்.
ஏனைய ஊழியர்களை, தற்போது வீடுகளிலிருந்து பணி புரியும் முறைமையை தொடர பணிக்குமாறு அறிவுறுத்துமாறு அவர் தெரிவித்துள்ளார்.