பொது மக்களுக்கான விசேட அறிவிப்பு..!

பொது மக்களுக்கான விசேட அறிவிப்பு..!

நேற்றைய தினம் கொவிட் 19 வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழந்த 4 நபர்களுள் மூன்று பேர் பெண்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த 42 வயதுடைய கொழும்பு 10 மாளிகாவத்தையைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்ணிற்கு நெடுங்காலமாகச் சுவாசக் கோளாறு நோயினால் பாதிக்கப்பட்டு வந்துள்ளதாகவும் அவர் வீட்டில் உயிரிழந்துள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கொவிட் 19 எனும் கொல்லை வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களுள் அதிகமானோர் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களாவர்.

இதன் காரணமாக,சுவாச நோய்கள் மற்றும் நெஞ்சுவலி உள்ளோர் உடனடியாக மருத்துவ உதவிகளை நாடுமாறு கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார மருத்துவர் ருவன் விஜேமுனி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.