கொரோனா தொற்றினால் நேற்று இறந்தவர்கள் தொடர்பான முழு விபரங்கள்!

கொரோனா தொற்றினால் நேற்று இறந்தவர்கள் தொடர்பான முழு விபரங்கள்!

இலங்கையில் கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 445 பேர் நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அத்துடன், நால்வர் உயிரிழந்துள்ளனர். இதனால் இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இன்று உயிரிழந்த நால்வர் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில், கொழும்பு - 10 மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த 42 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் நீண்ட காலமாக இருதய நோயினால் அவதிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது வீட்டில் வைத்து குறித்த பெண் உயிரிழந்துள்ள நிலையில், இருதய நோயுடன் கொரோனா தொற்று ஏற்பட்டையே மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் கொழும்பு - 10 மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த 69 வயதான பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளார். அவர் நீண்ட காலமாக பல நோய்களுடன் அவதிப்பட்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்று ஏற்பட்டமையே குறித்த பெண்ணின் மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வெல்லம்பிட்டிய பகுதியை சேர்நத 67 வயதான ஆண் ஒருவரும் இன்று கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். இவர் நீண்ட காலமாக நோய் தொற்றினால் அவதிப்பட்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறுகிய நாட்களில் காய்ச்சல் நோயினால் அவதிப்பட்டுள்ளதுடன், வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன், நிமோனியா நிலைமை ஏற்பட்டமையே மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கனேமுல்லை பிரதேசத்தை சேர்ந்த 88 வயதான பெண் ஒருவரும் இன்று உயிரிழந்துள்ளார். மினுவாங்கொடையில் நோய் தொற்றுக்குள்ளானவருடன் நெருங்கிப்பழகியுள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

கொரோனா நிமோனியாவுடன், இரத்தம் நஞ்சானமைமே குறித்த பெண் மரணமடைவதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.