
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களில் கொரோனா தொற்றால் 90 பேர் உயிரிழப்பு
இலங்கையைச் சேர்ந்த 90 பேர் வெளிநாடுகளில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலயில் உயிரிழந்துள்ளதாக ஸ்ரீலங்கா வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் அதிகமானோர் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரியச் சென்றவர்களாவர்.
இந்த நாடுகளில் 74 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதுடன் அதிலும் சவுதியிலேயே கூடுதலான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 31 இலங்கைத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
சவுதி 31,குவைத் 20, ஐக்கிய அமீரகம் 10, கட்டார் 06,லண்டன் 05, ஓமான் 04,அமெரிக்கா 04,கனடா 04,பஹ்ரைன் 02 ,ஜேர்மன் 02 ,இஸ்ரேல் 01,இத்தாலி 01