கண்டி போகம்பறை சிறைக்கும் பரவியது கொரோனா

கண்டி போகம்பறை சிறைக்கும் பரவியது கொரோனா

கண்டியில் உள்ள பழைய போகம்பறை சிறைச்சாலையில் உள்ள ஏழு ஆண் கைதிகளுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

அவர்கள் சிகிச்சைக்காக வெலிகந்த கோவிட் -19 சிறப்பு சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்பட்டதாக சிறை ஆணையர் (நிர்வாகம்) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு மகசின் சிறையிலிருந்து போகம்பறை சிறைக்கு மாற்றப்பட்ட கைதிகளின் ஒரு குழுவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே வெலிக்கடை சிறைச்சாலையிலும் கைதிகள் பலருக்கு கொரோனா தொற்று உள்ளமை குறிப்பிடத்தக்கது.