
வடக்கு கடற்பரப்பில் 4 இந்திய பிரஜைகள் உட்பட அறுவர் கைது
வடக்கு கடற்பரப்பில் நான்கு இந்தியப்பிரஜைகள் உட்பட அறுவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் – மன்னாருக்கு இடைப்பட்ட குதிரைமலை பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்படடுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் இந்தியாவிலிருந்து டவ் படகு மூலம் கொண்டுவரப்பட்ட 5711 கிலோ கிராம் மஞ்சள் கட்டிகளை கண்ணாடி இழைப்படகில் படகில் ஏற்றிக்கொண்டிருந்த போது இவர்கள் கைதாகியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் இலங்கைப் பிரஜைகள் இருவரும், இந்தியப் பிரஜைகள் நால்வரும் அடங்குகின்றனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணையில் கல்பிட்டி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் பெருந்தொகையாக மஞ்சள் கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸார் மூலமாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இரண்டு மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.