![](https://yarlosai.com/storage/app/news/1ca347c34020c496a0e525a29b2573ab.jpg)
கொரோனா தொற்றாளரிடமிருந்து ஏழு நாட்களுக்கு பின்னர், மற்றுமொருவருக்கு வைரஸ் பரவுமா..?
கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகி, நோய் அறிகுறியை வெளிப்படுத்தாத மற்றும் சிறு நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தும் நபர்களிடமிருந்து ஏழு நாட்களின் பின்னர், மற்றுமொருவருக்கு வைரஸ் தொற்று ஏற்படாது என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்ககழக மருத்துவ பீடத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத்துறை பிரிவின் பிரதானி, பேராசிரியர் நீலிகா மலவிகே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
எமது செய்திச் சேவையிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
விஞ்ஞான ரீதியான தகவல்களின் அடிப்படையில் இந்தத் தகவல்கள் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா நோயாளர் ஒருவருக்கு, நோய் அறிகுறிகள் தென்படாவிட்டால், அவரை தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடுமையான நோய் அறிகுறிகள் வெளிப்படுத்துபவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
நோய் அறியக்குறியை வெளிப்படுத்தாத மற்றும் சிறு நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தும் நபர்களிடமிருந்து ஏழு நாட்களின் பின்னர், மற்றுமொருவருக்கு வைரஸ் தொற்று ஏற்படாதமையினால் ஏனைய உலக நாடுகளில் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர்.
ஆனால், இலங்கையில் அவ்வாறானவர்கள் 14 நாட்கள் அந்த இடங்களில் தடுத்து வைக்கப்பட்டதன் பின்னரே சமூகமயப்படுத்தப்படுகின்றனர் என்று ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்ககழக மருத்துவ பீடத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத்துறை பிரிவின் பிரதானி, பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும், கடுமையான நோய் அறிகுறிகளை வெளிப்படுத்துபவர்களிடமிருந்து, 7 அல்லது 10 நாட்களில் ஏனையவர்களுக்கு தொற்றக்கூடிய அபாயம் உள்ளது.
எனவே அவ்வாறானவர்களை வைத்தியசாலைகளில் இருந்து வெளியேற்றுவதற்கு முன்னர் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.