5,711 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் அறுவர் கைது

5,711 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் அறுவர் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற 5,711 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் சந்தேக நபர்கள் ஆறு பேர் கைது கடற்படையினரால் செய்யப்பட்டுள்ளனர்.

வடமேல் கடற்படையினர் நேற்று (06) மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குதிரைமலை, கல்பிடிய, துடாவ ஆகிய பகுதிகளில் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.