தலங்கம பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

தலங்கம பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

பலாங்கொடை-தலங்கம பகுதியில் உள்ள காணியொன்றில் விலங்குகள் வேட்டைக்காக வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்கம்பியில் சிக்கி இன்று அதிகாலை நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் கஹவத்த-வெல்லந்துர பகுதியில் வசித்து வந்த 33 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், உயிரிழந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பலாங்கொடை ஆதார மருத்துவமனைக்கு கொண்டுசெல்லவுள்ளதாக  தெரிவிக்கபட்டது