கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்க தயாராகும் மற்றுமொரு மருத்துவமனை

கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்க தயாராகும் மற்றுமொரு மருத்துவமனை

காலி-கரந்தெணிய மாவட்ட மருத்துவமனையானது இன்று முதல் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் மத்திய நிலையமாக மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மருத்துவமனையில் ஏனைய நோய்களுக்கும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மற்றொரு பிரிவில் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் பிரனீத் தும்மாதுர தெரிவித்தார்.