நான்கு மாத குழந்தை உட்பட 7 பேருக்கு கொரோனா உறுதி!

நான்கு மாத குழந்தை உட்பட 7 பேருக்கு கொரோனா உறுதி!

மஸ்கெலியாவில் நான்கு மாத குழந்தை உட்பட 7 பேருக்கு பி.சி.ஆர் முடிவின் பின் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மஸ்கெலியா பொதுசுகாதார வைத்திய அதிகாரி துறைசாமிபிள்ளை சந்ரராஜன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் தாய் மற்றும் தந்தை , அவர்களுடன் தொடர்புடைய நான்கு பேர் அடங்குவதாக மஸ்கெலிய சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் மஸ்கெலியா காட்மோர் பகுதியில் பேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புடைய இருவருக்கும் இன்று காலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த கொரோனா நோயாளர்களை சிகிச்சைகளுக்காக வைத்தியாசலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் மஸ்கெலியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.