கொக்கல கடற்கரைப் பகுதியில் பெண்ணின் சடலமொன்று மீட்பு

கொக்கல கடற்கரைப் பகுதியில் பெண்ணின் சடலமொன்று மீட்பு

கொக்கல உள்ளூர் விமான நிலையத்திற்கு முன்னால் உள்ள கடற்கரைப் பகுதியில் இன்று (07) உயிரிழந்த நிலையில் பெண்ணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

40 வயதுடைய பெண்ணொருவரின் சடலமொன்றே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக கராபிடிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.