
பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கான செலவீனங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை..!
கொவிட்-19 தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கு மேற்கொள்ளப்படும் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்காக, நாளாந்தம் 6 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை செலவிடப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
பி.சீ.ஆர் பரிசோதனையின் இரசாயண பகுப்பாய்வு நடவடிக்கைகளுக்காக ஒருவருக்கு 6 ஆயிரம் ரூபா செலவாகுவதாக சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
நாட்டில் நேற்றைய தினம் 11 ஆயிரத்து 824 பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கமைய இதுவரையில் 5 லட்சத்து 80 ஆயிரத்த 598 பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.