கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு..!

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு..!

கிழக்கு மாகாணத்தில் கொவிட்19 தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 100ஆக அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மத்தியில் கொவிட்19 பரவல் அச்சுறுத்தல் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத நிலைமையை அவதானிக்க முடிவதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகய்யா லதாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்றுகாலை 6 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டது.

இதன்படி அங்கு பேருக்கு தொற்றுறுதியானதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகய்யா லதாகரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மக்களது ஒத்துழைப்பு இல்லாமல் மட்டக்களப்பில் கொவிட்19 தொற்றுப் பரவலை தடுப்பது கடினம் என்றும் அவர் கூறினார்.