
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் அடுத்த வாரம்..!
அடுத்த ஆண்டுக்கான பாதீட்டு விவாத நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று அடுத்த வாரம் இடம்பெறவுள்ளது.
இதற்காக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,
இதன்போது பாதீட்டு விவாதத்தை நடத்துவதற்கான நாட்கள் தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் 17 ஆம் திகதி நிதியமைச்சர் என்ற அடிப்படையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.