ஊரடங்கு நீக்கப்படுமா? நீடிக்கப்படுமா? இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்

ஊரடங்கு நீக்கப்படுமா? நீடிக்கப்படுமா? இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்

மேல் மாகாணத்தின் ஊரடங்கு நிலைமையை மறுஆய்வு செய்வதற்காக COVID-19 தொடர்பான ஜனாதிபதி பணிக்குழு இன்று கூட உள்ளது.

முன்னர் அறிவிக்கப்பட்டதன் படி திங்கட்கிழமை (9ஆம் திகதி) காலை 5 மணிக்கு ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுமா? அல்லது நீடிக்கப்படுமா? என்று இன்று தீர்மானிக்க உள்ளதாக இராணுவத் தளபதியும் COVID தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா நேற்று ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்தார்.

மினுவாங்கொடை கொத்தணி தொடர்பிலும், கம்பஹா மாவட்டத்தின் நிலைமைகளையும், பெலியகொடை மீன் சந்தை கொத்தணி தொடர்பான தரவுகளையும் ஆராய்ந்து மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.

இது தொடர்பில் சவேந்திர சில்வா தெரிவித்ததாவது,

“நிலைமை முழுமையாக மதிப்பாய்வு செய்யப்படும்.

திங்களன்று அறிவிக்கப்பட்டபடி ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், மேல் மாகாணத்திற்குள் ஒரு சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட மண்டலங்களாக அறிவிக்கப்படும்.

பரவல் இருக்கக்கூடும் என்று நாங்கள் கருதும் முக்கியமான இடங்கள் கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படும்.

ஒன்று அல்லது இரண்டு இடங்களை தனிமைப்படுத்தப்பட்ட மண்டலங்களாக அறிவிக்க வேண்டிய அவசியம் இருக்கலாம் என்று சில்வா கூறினார்.

இதேவேளை, சமீபத்திய வாரங்களில், கொழும்பு மாவட்டத்தில் 2,000 க்கும் மேற்பட்ட COVID-19 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் 5,800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மாவட்டத்திற்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.