கொழும்பில் காற்று மாசுபாட்டின் அளவில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கொழும்பில் காற்று மாசுபாட்டின் அளவில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கொழும்பில் காற்று மாசுபாட்டின் அளவு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

இன்றையதினம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலே அவ் அமைப்பு இவ்வாறு கூறியுள்ளது.

ஊரடங்கு உத்தரவு மறுசீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து வீதிகளில் குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்கள் மற்றும் மழை காற்று மற்றும் வானிலை காரணமாக இந்த காற்றின் தரம் மேம்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு விஞ்ஞானி சரத் பிரேமசிறி கூறியுள்ளார்.

குறித்த காரணிகளின் விளைவாக இலங்கையில் காற்று மாசுபாடு மற்றும் வளிமண்டலத்தில் காபனீர் ஒக்சைட்டின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது.

நாட்டில் தொழில்துறை மற்றும் பிற மனித செயற்பாடுகள் குறைந்ததுள்ளதாலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது வாகனங்கள் வெளியேற்றும் காபனீர் ஒக்சைட்டின் அளவு பாதியாக குறைந்துவிட்டதாக அமெரிக்க விஞ்ஞானிகள் குழு கூறியுள்ளது