கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகளுக்காக ஒரே ஒரு விசேட வைத்தியசாலை

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகளுக்காக ஒரே ஒரு விசேட வைத்தியசாலை

கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்காக இலங்கையில் ஒரே சிகிச்சை மையமாக கொழும்பு கிழக்கு அடிப்படை மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 80 க்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் மயூரமான்ன தெவோலகே தெரிவித்தார்.

தற்போது கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட 28 கர்ப்பிணித் தாய்மார்கள் கொழும்பு கிழக்கு அடிப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்கள் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்த பின்பே வீட்டிற்குச் செல்வார்கள் என்று டாக்டர் மயூரமான்ன தெவோலகே தெரிவித்தார்.