
இலங்கையில் sanitizer மற்றும் முகக்கவசங்களை பயன்படுத்துவோருக்கு முக்கிய தகவல்
இலங்கையில் சில இடங்களில் தரமற்ற கை சுத்திகரிப்பான் திரவங்கள் (Hand sanitizer) விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
தரமற்ற Hand sanitizer களை பயன்படுத்துவது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மகேந்திர பாலசூரிய இதை கூறினார்.
முகக்கவசங்களை பயன்படுத்தும் போது தரமான முகக்கவசங்களை பயன்படுத்துமாறும், இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.