லேடி றிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையின் வைத்தியருக்கு கொரோனா தொற்று!

லேடி றிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையின் வைத்தியருக்கு கொரோனா தொற்று!

கொழும்பு,  பொரளை  லேடி  றிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையின் வைத்தியர்  ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு  பொரளை  லேடி றிட்ஜவே குழந்தைகள் வைத்தியசாலையில்  தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.

வைத்தியசாலையில் இருந்து குறித்த வைத்தியருக்கு தொற்று ஏற்படவில்லை என  வைத்தியசாலை பணிப்பாளர்  வைத்தியர் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த வைத்தியசாலையில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள்  20 பேர் உள்ளடங்கலாக  12  தாய்மார் தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருகை தருபவர்கள் அச்சமடையத் தேவையில்லை என  வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.