மொனராகலை மாவட்டத்தில் நால்வருக்கு கொரோனா...!

மொனராகலை மாவட்டத்தில் நால்வருக்கு கொரோனா...!

மொனராகலை மாவட்டத்தில் இதுவரையில் 4 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக மாவட்ட செயலாளர் குணதாஸ சமரசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த நான்கு பேரும், ஐ.டி.எச் மற்றும் அம்பாந்தோட்டை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம், மொனராகலை மாவட்டத்தில் 811 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மொனராகலை மாவட்ட செயலாளர் குணதாஸ சமரசிங்க தெரிவித்துள்ளார்.