வௌிநாடுகளில் சிக்கியிருந்த 34 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

வௌிநாடுகளில் சிக்கியிருந்த 34 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

கொரோனா தொற்று காரணமாக வௌிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கை பிரஜைகள் 34 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கட்டார், அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து இவர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக COVID-19 தொற்றை தடுக்கும் தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ள அனைவரையும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்புவதற்கு நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.