கொரோனா தொற்று தடுப்புக்கான மீளாய்வுக் கூட்டம்...!
வடமாகாணத்தில் கொரோனா தொற்று தடுப்புக்கான மீளாய்வுக் கூட்டம் நேற்று வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது வடமாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கொவிட்19 பரவல் தடுப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதோடு மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் அறிவுறுத்தல்களை நிறுவுவதற்கும் ஆளுனரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விரைவான பிறப்பொருள் எதிரியாக்கி பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின், சமுதாய வைத்திய நிபுணர் ஷெரின் மெனுவேல்பிள்ளை பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.