இலங்கை, இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் தீர்மானமிக்க பேச்சுவார்த்தை....!

இலங்கை, இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் தீர்மானமிக்க பேச்சுவார்த்தை....!

இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினைகள் தொடர்பான தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று இந்த மாத நடுப்பகுதியில் நடைபெறவுள்ளது.

கடற்றொழில்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,   இந்த தகவலை வழங்கினார்.

இரண்டு நாடுகளின் கடற்றொழில் அமைச்சுகள் மட்டத்திலும், இலங்கை இந்திய ஒன்றிணைந்த மீனவர்கள் செயற்குழு மட்டத்திலும் இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.

இந்த பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 16ம் திகதி அல்லது 23ம் திகதி, தொலைகாணொளி தொழில்நுட்பம் ஊடாக இடம்பெறும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கை - இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினை நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ளது.

இதுதொடர்பில் ஏலவே இருதரப்பு பேச்சுவார்த்தைகள் பலசுற்றுகளாக இடம்பெற்றுள்ள போதும், அவற்றின் போது இணங்கப்பட்ட விடயங்கள் முறையாக அமுல்படுத்தப்படவில்லை.

தொடர்ச்சியாக இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைகின்ற நிலைமை நிலவுவதால், உள்ளுர் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில், உரிய தீர்வுகளை காணும் பொருட்டு இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்.