34 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர்...!

34 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர்...!

தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவுசெய்த 34 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர்.

தனியார் விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களே, இவ்வாறு வீடு திரும்பியதாக கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரையில், 63 ஆயிரத்து 223 பேர் தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேநேரம், முப்படையினரால் முன்னெடுத்துச் செல்லப்படும் 34 தனிமைப்படுத்தல் மையங்களில், 2 ஆயிரத்து 776 பேர் தொடர்ந்தும் தனிமைப்பத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.