
அரசாங்க நிதி பற்றிய குழு, சபாநாயகரால் அறிவிப்பு...!
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்கு, 18 உறுப்பினர்கள் அடங்கிய அரசாங்க நிதி பற்றிய குழு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் இன்று சபையில் அறிவிக்கப்பட்டது.
அமைச்சர் பந்துல குணவர்தன, கெஹலிய ரம்புக்வெல, இராஜாங்க அமைச்சர்களான சுசில் பிரேமஜந்த, விதுர விக்ரமநாயக்க, சரத் வீரசேகர, டி.வி.சானக்க, நாலக்க கொடகஹேவா, அநுர பிரியதர்ஷண யாபா ஆகியோர் இந்தக் குழுவின் அங்கத்தவர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான, எம்.ஏ.சுமந்திரன், விஜித்த ஹேரத், டிலான் பெரேரா, ஹர்ஷ டி சில்வா, சமிந்த விஜேசிறி, ஹேஷா வித்தானவே, இசுறு தொடங்கொட, அநுப பெஸ்குவல், சஹன் பிரதீப், பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோரும் அரச நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தவிசாளர், குழுவின் அங்கத்துவ உறுப்பினர்களிலிருந்து அந்தக் குழுவினாலேயே தெரிவுசெய்யப்படுவது தொடர்பான பிரேரணையும் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.