கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வீரர்கள் நால்வருக்கு கொரோனா தொற்று

கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வீரர்கள் நால்வருக்கு கொரோனா தொற்று

கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு படைப்பிரிவின் நான்கு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.

தீயணைப்பு படைப்பிரிவின் 65 ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைக்கு பின்னரே இவ்வாறு நான்கு பேருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்படடுள்ளமை உறுதியாகியுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்தார்.

அத்தோடுஇ கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட குறித்த தொற்றாளர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரவிpக்கப்பட்டுள்ளது.