சுகாதார நடைமுறையை பின்பற்றாத சாரதி நடத்துனரை கைது செய்யுங்கள்!

சுகாதார நடைமுறையை பின்பற்றாத சாரதி நடத்துனரை கைது செய்யுங்கள்!

சுகாதார முறைகளை பின்பற்றாத பேருந்தின் வழித்தட அனுமதியை இரத்து செய்து சாரதி நடத்துனரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வவுனியாவில் இடம்பெற்ற கொரனா தொடர்பான விசேட கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் கொரோனா நிலைமைகள் தொடர்பான கலந்துரையாடல் வவுனியா மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போதே வடமாகாண ஆளுநரின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத பேருந்தின் வழித்தட அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதுடன் நடத்துனர் மற்றும் சாரதியை கைது செய்யும் செயற்பாட்டை வவுனியாவிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என கலந்துரையாடப்பட்டிருந்தது.

இதேவேளை வவுனியாவில் இருந்து வெளியில் செல்லும் வாகனங்களின் சாரதிகளையும் பி சி ஆர் பரிசோதனைக்குட்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் கலந்துரையாடப்பட்டிருந்தது.