
இன்று மாலை வேளையில் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழையுடன் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இரண்டாவது பாருவபெயர்ச்சி காலநிலை படிப்படியாக அதிகரிப்பது இதற்கு காரணம் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இதற்கமைய ஊவா, கிழக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் பிறபகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கு அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என்பதுடன் அந்த வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.