புறக்கோட்டை மொத்த விற்பனை வர்த்தக நிலையங்கள் நாளை திறப்பு

புறக்கோட்டை மொத்த விற்பனை வர்த்தக நிலையங்கள் நாளை திறப்பு

நாளைய தினம் புறக்கோட்டையில் உள்ள மொத்த விற்பனை வர்த்தக நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் சங்க தலைவர் எஸ் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாளை அதிகாலை 5 மணிமுதல் மொத்த விற்பனை வர்த்தக நிலையங்கள் திறக்கப்படவுள்ளதுடன் ஊரடங்கு சட்ட அனுமதிபத்திரத்தை பெற்று அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய வருமாறு அவர் வர்த்தகர்களிடம் கோரியுள்ளார்.