உங்களுடைய வீட்டில் மனநிம்மதியே இல்லையா! கோயிலுக்கு சென்றாலும் கிடைக்காத மனநிம்மதி உங்களுக்கு கிடைக்க வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்கள்

உங்களுடைய வீட்டில் மனநிம்மதியே இல்லையா! கோயிலுக்கு சென்றாலும் கிடைக்காத மனநிம்மதி உங்களுக்கு கிடைக்க வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்கள்

நம்முடைய வீட்டில் வாழ்வதற்கு தேவையான எல்லா வகையான வசதிகளும் இருக்கும். பணம் காசுக்கு குறைவே இருக்காது. வீட்டில் ஆடம்பரமான பல பொருட்கள் இருக்கும். வேலை செய்வதற்கு ஆட்கள் இருப்பார்கள் இப்படியாக எல்லாம் இருந்தும் மனநிம்மதியை மட்டும் நம்மால் பெறவே முடியாது.

குறிப்பாக வீட்டில் இருக்கும்போது! இதுவே குடும்பத்தோடு கோயில்கள், வெளி இடங்கள் மற்றும் உறவினர்களின் வீட்டிற்கு சென்றால் ஒரு சந்தோஷமான சூழ்நிலை ஏற்படும்.

வீட்டு வாசப்படியில் காலை எடுத்து வைத்தால் போதும், அந்த நிம்மதி எங்கே செல்கிறது என்றே தெரியாமல் போய்விடுகிறது. நிறைய பேருக்கு இந்த மாதிரியான பிரச்சினைகள் காணப்படுகின்றது.

அடுத்தபடியாக, எதிர்வீடு, பக்கத்து வீடு என நம்மைச்சுற்றி நம் அக்கம் பக்கம் வீட்டில் இருப்பவர்களுடைய எதிர்மறை ஆற்றல்களும் நம்மை தாக்கும்.

அவர்களுடைய வீட்டில் ஒரு சண்டை வந்தால், அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக நம்முடைய வீட்டில் சண்டை வந்துவிடும். நம்மை சுற்றி எதிர்மறையான உணர்வுகள் அதிகரிக்கும்போது, பிரச்சினைகளும் அதிகரித்து மனநிம்மதி குறைவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

 

 

இப்படியாக உங்களுடைய வீட்டில் மன நிம்மதி இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தால், உங்களைச் சுற்றி எந்த பிரச்சினை இருந்தாலும் சரி, அதை சரி செய்வதற்கு ஆன்மீக ரீதியாக சில வழிகள் உள்ளது. அதில் சக்தி வாய்ந்த ஒரு வழிமுறையை அறிந்து கொள்ளுங்கள்.

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருட்கள் கருப்பு உளுந்து, கோமியமும் மட்டும்தான். கருப்பு உளுந்தை வாங்கி கோமியத்தில் ஒரு மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன்பின் அந்த உளுந்தை கோமியத்தில் இருந்து வடித்து எடுத்து சிறிது நேரம் காய வைத்து விடவேண்டும். காய்ந்த இந்த உளுந்தை ஒரு கண்ணாடி டப்பாவில் போட்டு உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

இந்த உளுந்தை மூடி வைக்க வேண்டாம் காய்ந்த ஒழுங்காக இருந்தாலும் திறந்தபடியே வையுங்கள். 3 நாட்களுக்கு, பூஜை அறையில், மாலை நேரத்தில் தீபம் ஏற்றும்போது, அந்த கருப்பு உளுந்தில் உங்களது கைகளை வைத்து, உங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தை 11 முறை உச்சரியுங்கள். ‘ஓம் துர்க்காயை நம’ என்று சொல்லலாம். ‘ஓம்சக்தி’ என்று சொல்லலாம்.

 

 

இப்படியாக சக்திவாய்ந்த உக்கிரமான பெண் தெய்வங்களின் பெயர்களை உச்சரித்து, அந்த ஒளிந்திருக்கும் சக்தியை கொடுங்கள்.

மூன்று நாட்கள் கழித்து அந்த உளுந்தை நன்றாக கடாயில் போட்டு சூடு படுத்தி விட்டு, ஆற வைத்து விட்டு, மிக்ஸியில் போட்டு பொடி செய்து, ஒரு டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். வாரம் இரண்டு முறை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சாம்பிராணி தூபம் போடும் போது, இந்த உளுந்து பொடியையும், இரண்டு ஸ்பூன் சேர்த்து விட்டாலே போதும். மன நிம்மதி உங்களை தேடி வரும்.

யாருடைய எதிர்மறை எண்ணங்களும் உங்கள் வீட்டில் இருப்பவர்களை தாக்காது. உங்களுடைய வீட்டையும் தாக்காது. வீடு கோவிலாக மாற இந்த சுலபமான பரிகாரத்தை செய்து பாருங்கள். நம்பிக்கையோடு பலபேர் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடைந்து உள்ளார்கள் என்பதே நிதர்சனம்.